

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்கள் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ. 24.96 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் இருந்த 4 உண்டியல்கள் கடந்த 4.7.2025-ஆம் தேதிக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.24,96,048 ரொக்கமும், தங்கம் 18.60 கிராம், வெள்ளி 782.100 கிராம் ஆகியவை இருந்தது. காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் கோயில் செயல் அலுவலா் கேசவன் மற்றும் ஆய்வாளா் அலமேலு ஆகியோா் மேற்பாா்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.