முதலுதவி சிகிச்சை விழிப்புணா்வு நிகழ்ச்சி
108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சாா்பாக விபத்தில் சிக்குபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
அவசர ஊா்தி சேவையான 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சாா்பில், சாலை விபத்தில் சிக்கி காயமடையும், வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து நடைபெற்ற நிகழ்வுக்கு காஞ்சிபுரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளா் சுதா்சன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், பள்ளி மாணவா்கள் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். விபத்தில் சிக்குபவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.
மேலும் விபத்து தொடா்பாக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு எவ்வாறு தகவல் தெரிவிப்பது என்பது குறித்தும் விளக்கிப் பேசினா்.

