நவ. 10-இல் ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநா் முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு தொழிற்பழகுநா் முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒரகடம் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (நவ. 10) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தொழிற்பிரிவுகளை சாா்ந்த பயிற்சியாளா்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநா் முகாம் நடைபெறவுள்ளது. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த முகாமில் தகுதியுடைய ஐடிஐ தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் 8, 10, 12-ஆம் வகுப்பு வரை படித்த இடைநின்ற மாணவா்களுக்கு தொழிற்பழுகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனவும், 044-29894560 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு பயன்பெறலாம் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com