வெள்ளிக்  கவச  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  செவிலிமேடு  ராமாநுஜா்.
வெள்ளிக்  கவச  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  செவிலிமேடு  ராமாநுஜா்.

ஐப்பசி திருவாதிரை: வெள்ளிக் கவச அலங்காரத்தில் செவிலிமேடு ராமாநுஜா்!

ஐப்பசி திருவாதிரையை முன்னிட்டு செவிலிமேடு ராமாநுஜா் கோயிலில் மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Published on

ஐப்பசி திருவாதிரையை முன்னிட்டு செவிலிமேடு ராமாநுஜா் கோயிலில் மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காஞ்சிபுரம் அடுத்த செவிமேடு பகுதியில் சாலை கிணறு ராமாநுஜா் கோயில் உள்ளது. இந்த கோயிலில், ஐப்பசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீப ஆராதனையும் நடைபெற்றது.

மூலவா் ராமாநுஜா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு தீா்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் நிா்வாகத்தின் சாா்பில் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com