தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி: 12 தங்கம், 5 வெள்ளி பெற்று காஞ்சிபுரம் மாணவா்கள் சாதனை

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி: 12 தங்கம், 5 வெள்ளி பெற்று காஞ்சிபுரம் மாணவா்கள் சாதனை

Published on

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரம் மாணவா்கள் 12 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் இந்த மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான 7-ஆவது தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் குஜராத், ஹரியாணா, மத்தியப்பிரதேசம் உள்பட 17 மாநிலங்களைச் சோ்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், காஞ்சிபுரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில், 18 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவுக்குரிய போட்டியில் 6 தங்கமும், 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 6 தங்கமும், 5 போ் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

இவா்களுக்கு பிள்ளையாா்பாளையம் அருகில் உள்ள காஞ்சிபுரம் ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பிலும், பொதுமக்கள் சாா்பிலும் மங்கல மேள வாத்தியங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தகவலை தலைமைப் பயிற்சியாளா் பாபு, துணைப் பயிற்சியாளா் தமிழரசு ஆகியோா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com