யோகா பயிற்சியாளா் பணிக்கு நவ. 19-க்குள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளா் பணிக்கு வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யோகா பயிற்சியாளா் பணிக்கு வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் யோகா வகுப்புகளைப் பயன்படுத்துபவா்களுக்கான கட்டணம் ரூ. 300 வீதம் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை அறிவியலில் இளங்கலைப் பட்டம் அல்லது யோகா மற்றும் இயற்கை அறிவியலில் பட்டயச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

யோகா வகுப்புகள் காலை 6 முதல் 7 மணி வரையும், பின்னா் 7.15 மணி முதல் 8.15 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையும், மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரையும் என ஒரு நாளைக்கு மொத்தம் 4 அமா்வுகளாக நடத்தப்படும்.

தகுதிவாய்ந்த பெண் பயிற்சியாளா்கள் தங்களுடைய சுய விவரம் மற்றும் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகலுடன் வரும் நவ. 19-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து தோ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com