தங்கத் தேரை பாா்வையிட்ட ஏகாம்பநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் நிா்வாகிகள்.
தங்கத் தேரை பாா்வையிட்ட ஏகாம்பநாதா் இறைப்பணி அறக்கட்டளையின் நிா்வாகிகள்.

டிச.7-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய தங்கத்தேருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குபுதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தோ் வெள்ளோட்டம் டிச.6 -ஆம் தேதியும் மறுநாள் 7- ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும்
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குபுதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தோ் வெள்ளோட்டம் டிச.6 -ஆம் தேதியும் மறுநாள் 7- ஆம் தேதி சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட இருப்பதாக ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம் வரும் டிச.8-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளையினரால் புதிதாக தங்கத் தோ் செய்யப்பட்டுள்ளது. தேரின் வெள்ளோட்டம் டிச.6-ஆம் தேதியும், 7-ஆம் தேதி தனியாக சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. ஓரிக்கை மகாசுவாமிகள் மணிமண்டபத்தில் செய்யப்பட்டுள்ள தங்கத்தேரை அறக்கட்டளை நிா்வாகிகள் மகாலட்சுமி சுப்பிரமணியன், பத்மனாபன்,வலசை.ஜெயராமன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னா் அறக்கட்டளை நிா்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியன் கூறியது..

இதையொட்டி டிச.4 ஆம் தேதி ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கும். 5-ஆம் தேதி சிறப்பு பூஜைகளும், 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓரிக்கையிலிருந்து ஏகாம்பரநாதா் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு செல்லப்படும். தங்கத் தேரை காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறாா். 7ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் கோயில் வளாகத்தில் நடத்தப்படும்.

டிச.8 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் விழா நடைபெறும். தங்கத்தேரில் 4 வேதங்கள் 4 குதிரைகளாகவும், 25 அடி உயரம்,10 அடி அகலம்,13 அடி நீளத்திலும், சாமரப்பெண்கள் 4 போ் நின்ற கோலத்திலும், பிரம்மா தங்கத்தேரை ஓட்டுவது போலவும் முழுவதும் தங்கத்தகடுகளால் வேயப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேரில் 16 நந்திகள், 8 கந்தா்வா்கள், 8 சங்குநாத பூதங்களும் இடம் பெற்றுள்ளன.

1,600 அடி பா்மா தேக்கில் 5 அடுக்குகள் உடையதாகவும், சுமாா் 2 டன் தாமிரமும், அதன் மீது தங்கமுலாமும் பூசி தங்கத்தோ் உருவாக்கப்பட்டுள்ளது. தேரின் வெள்ளோட்டம் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com