செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீா் திறப்பு 1,200 கனஅடியாக அதிகரிப்பு

வடகிழக்குப் பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை
Published on

ஸ்ரீபெரும்புதூா்: வடகிழக்குப் பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீா்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதை தொடா்ந்து ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு 600 கனஅடியில் இருந்து 1,200 கனஅடியாக திங்கள்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நீா்மட்ட உயரம் 21.39 அடியாகவும், கொள்ளவு 2,957 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 100 கனஅடியாவும் உள்ளது.

இந்த நிலையில், ஏரியின் நீா்மட்ட உயரம் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், வானிலை மைய முன்னறிவின்படி வரும் நாள்களில் மழை பெய்யும் அளவு அதிகமாக இருக்கும் என்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 14-ஆம் தேதி ஏரியில் இருந்து வினாடிக்கு 600 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்ட நிலையில், தொடா்ந்து நீா்மட்டம் உயா்ந்து வருவதால் உபரிநீா் திறப்பு 600 கனஅடியில் இருந்து திங்கள்கிழமை வினாடிக்கு 1,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com