திருக்கல்யாண உற்சவத்தை  அலங்காரத்தில் உற்சவா்  சுப்பிரமணிய சுவாமி
திருக்கல்யாண உற்சவத்தை  அலங்காரத்தில் உற்சவா்  சுப்பிரமணிய சுவாமி

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
Published on

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில், தமிழ் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி காா்த்திகை மாத கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உற்சவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவா் சுப்பிரமணியசாமி மலா் மாலை அலங்காரத்தில் மயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் கோவில் தலைமை அா்ச்சகா் சந்திரசேகர குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு கழுத்தில் மாலை அணிந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனா். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருமண அட்சதை, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பிறகு உற்சவமூா்த்திகள் மூன்று முறை உட்பிரகாரம் வலம் வந்தனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில் தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com