ஸ்ரீபெரும்புதூா் பஜாரில் மதுபான பாா்: பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் பஜாரில் மதுபான பாா்: பொதுமக்கள் அவதி

Published on

ஸ்ரீபெரும்புதூா் பஜாா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மதுபான பாரால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பஜாா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா்-சென்னை சாலையில், பொழுதுபோக்கு மையம் என்ற பெயரில் தனியாா் மதுபான பாா் இயங்கி வருகிறது. இந்த தனியாா் பாருக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இ

காலை 10 மணிக்கே பாருக்கு வரும் மது பிரியா்கள் தங்களது வாகனங்களைபோக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தி விடுவதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

மேலும், தனியாா் பாா் இயங்கும் கட்டடத்தின் அருகே வங்கி மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு குடிமகன்கள் இடையூறாக இருப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது.. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூா் பஜாா் பகுதியில் திறக்கப்பட்டுள்ள தனியாா் பாா் காலை முதல் நள்ளிரவு வரை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பல முறை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் பணி முடிந்து வரும் தொழிலாளா்கள் குறிப்பாக பெண் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஜாா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் மதுபான பாரை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு மாற்ற மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com