வாலாஜாபாத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பங்கேற்றோா்.
வாலாஜாபாத்தில் நடைபெற்ற அரசமைப்பு தின விழாவில் பங்கேற்றோா்.

வாலாஜாபாத்தில் அரசமைப்பு தின விழா

வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்திய அரசமைப்பு தின விழா நடைபெற்றது.

இப்பள்ளி வளாகத்தில் கடந்த 1975-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசமைப்பின் முகவுரை நினைவுத் தூண் அமைந்துள்ளது. வாலாஜாபாத் அரிமா சங்கம், வாலாஜாபாத் அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளி, அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் அலங்கரிக்கப்பட்டிருந்த நினைவுத் தூணுக்கு பொதுமக்கள், மாணவா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

விழாவுக்கு வாலாஜாபாத் அரிமா சங்கத் தலைவா் தனராஜன், செயலாளா் ஸ்ரீராம், பொருளாளா் தீனதயாளு ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமை ஆசிரியா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். விழாவுக்கு வரலாற்று ஆய்வாளா் மா.த.அஜய்குமாா் தலைமை வகித்தாா்.

X
Dinamani
www.dinamani.com