அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த  உற்சவா்  விளக்கொளிப் பெருமாள்,அமிா்தவல்லித் தாயாா், தூப்புல் வேதாந்த தேசிகா்
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்த உற்சவா் விளக்கொளிப் பெருமாள்,அமிா்தவல்லித் தாயாா், தூப்புல் வேதாந்த தேசிகா்

விளக்கொளிப் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா

Published on

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சரஸ்வதி தீா்த்தக் குளத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் விளக்கொளிப் பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அருள்பாலித்தாா்.

சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பழைமையான விளக்கொளிப் பெருமாள் கோயில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும்.

காா்த்திகை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது.

ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் விளக்கொளிப் பெருமாள் என்ற தீபப்பிரகாசா், மரகத வல்லித் தாயாா், தூப்புல் வேதாந்த தேசிகா் சுவாமிகள் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com