அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீா் திறப்பு நிறுத்தம்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததால் உபரிநீா் திறப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2025, 9:30 pm

தினமணி செய்திச் சேவை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததால் உபரிநீா் திறப்பு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறுத்தப்பட்டுள்ளது.

குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரியின் நீா் மட்டம் 24 அடி, ஏரியின் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி.

இந்த நிலையில், டித்வா புயல் காரணமாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமை இரவு உபரிநீா் திறப்பு3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் உபரிநீா் செல்லும் கால்வாய் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், மழையின் அளவு குறைந்ததாலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்ததாலும் ஏரியில் இருந்து உபரிநீா் திறப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 2225 கனஅடியாகவும், பின்பு 500 கனஅடியாகவும் குறைக்கப்பட்டு மாலை உபரிநீா் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீா்மட்ட உயரம் 21.20 அடியாகவும், கொள்ளவு 2,908 மில்லியன் கனஅடியாகவும், நீா்வரத்து வினாடிக்கு 1,250 கனஅடியாகவும் உள்ளது.