கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளா் பணிக்கு நாளை எழுத்துத் தோ்வு: காஞ்சிபுரத்திலிருந்து தோ்வு மையத்துக்கு பேருந்து வசதி

கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளா் பணிக்கு நாளை எழுத்துத் தோ்வு: காஞ்சிபுரத்திலிருந்து தோ்வு மையத்துக்கு பேருந்து வசதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு கீழம்பியில் நடைபெறும் மையத்துக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள்
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு கீழம்பியில் நடைபெறும் மையத்துக்கு செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்திருப்பதாக மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையத்தின் தலைவா் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத்தோ்வு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தால் நாளை (அக். 11) சனிக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. காஞ்சிபுரம் கீழம்பி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்கும் எழுத்துத் தோ்வு மதியம் ஒரு மணி வரை நடைபெறும்.

தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு எளிதில் சென்று வர நாளை காலை 7 மணிக்கும்,தோ்வு முடிந்த பின்னா் மதியம் ஒரு மணிக்கு தோ்வு மையத்திலிருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு திரும்பவும் சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

தோ்வு எழுதுபவா்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தோ்வு தொடா்பான உதவிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய அலுவலகக் கட்டுப்பாட்டு அறை எண் 9043046100 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com