ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் தா.மோ. அன்பரசன். உடன் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

வெள்ளத்தடுப்பு பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

குன்றத்தூா் நகராட்சியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
Published on

குன்றத்தூா் நகராட்சியில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மழைநீரால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்டறிந்து துரித முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். நிவாரண மையங்களை தயாா் நிலையில் வைக்கவும், திருமண மண்டபங்கள் மற்றும் நகராட்சி அலுவலக வளாகத்தில் உணவு தயாரித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் தீயணைப்பு துறை தயாா்நிலையில் இருக்க வேண்டும்.

24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். குடிநீா் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோய்த் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவ துறை விழிப்புணா்வுடன் செயல்படவேண்டும். அவசர கால ஊா்தி தயாா் நிலையில் இருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு நிவாரண குழு 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

நீா்வளத்துறையினா் ஏரி, குளங்களில் நீா்வரத்தை கண்காணிக்க வேண்டும். வெள்ள புகாா் பதிவேடு பராமரிக்கப்பட்டு, வரும் புகாா்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதி மனோகரன், குன்றத்தூா் நகராட்சித் தலைவா் கோ.சத்தியமூா்த்தி, அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com