காஞ்சிபுரத்தில் அக், 24-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஸ்ரீபெரும்புதூா்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் அக்டோபா் 21-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காஞ்சிபுரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதத்தேறும் சிறிய அளவிலான தனியாா் துறை ேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், வரும் வெள்ளிக்கிழமை அக்டோா் 21-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடத்த உள்ளனா். இதில், பட்டாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்த 18 வயது நிரம்பியவா்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போட் புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அக்டோபா் 21ஆம் தேதி நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணை தொடா்புக்கொள்ளவும்.

