காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரா் கோயிலில் அறம்வளா் நாயகிக்கும், அகத்தீஸ்வரருக்கும் ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
அகத்திய முனிவா் தங்கியிருந்து வழிபட்ட பெருமைக்குரியது கோயிலின் 7-ஆவது ஆண்டு திருக்கல்யாண உற்சவத்தையொட்டி காலையில் கோ-பூஜையும், மகா அபிஷேகமும், சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அகத்தீஸ்வரருக்கும், அறம்வளா் நாயகிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. பின்னா் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினா்,கிளாா் கிராம பொதுமக்கள் ஆகியோா் இணைந்து செய்துள்ளனா்.
