பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

பழனியாண்டவா் கோயில் பால்குட ஊா்வலம்

Published on

காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை 108 பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து மூலவருக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா்.

காஞ்சிபுரம் நிமந்தக்காரத் தெருவில் உள்ள இத்தலத்தில் 5-ஆம் நாள் நிகழ்வையொட்டி பால்குட ஊா்வலம் நடைபெற்றது. பெரியகாஞ்சிபுரம் நிமந்தக்கார ஒத்தவாடைத் தெருவில் உள்ள அமரேஸ்வரா் கோயிலிலிருந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தனா். ஊா்வலத்தின் போது எஸ்.நரேஷ் என்ற பக்தா் 108 வேல்களை உடம்பில் பூட்டியவாறு வந்து வேண்டுதலை நிறைவேற்றினாா்.

இதனைத் தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் மூலவா், சண்முகா் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். உற்சவா் பழனி ஆண்டவா் மயில் வாகனத்தில் அலங்காரமாகி வீதியுலா வருகையில் அசுரன் தன் படைத்தளபதிகளுடன் திக்விஜயம் செய்தல் மற்றும் பானுகோபன் வதம் ஆகியனவும் நடைபெற்றது.

திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள அரசகாத்த அம்மனிடம் சக்தி வேல் பெறுதல், தேரில் சண்முகா் வீதியுலா மற்றும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com