கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

தகுதியற்ற நபா்களை வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

Published on

தகுதியற்ற நபா்களை வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் அறிவுறுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்குப்பதிவு அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வரும் நவ.4 முதல் டிச.4 ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். இப்பணியினை மேற்கொள்ள 1,401 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களும், அவா்களை கண்காணிக்க 145 மேற்பாா்வையாளா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

டிச.4 ஆம் தேதி வாக்குச்சாவடி மறுவரையறை வகைப்படுத்த வேண்டும். டிச.5 முதல் டிச.8 வரை கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலை தயாா் செய்ய வேண்டும். டிச.9 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டும்.டிச.9 ஆம் தேதி முதல் ஜன.8 வரை கோரிக்கைகளும், மறுப்புரைகளும் பெற வேண்டும்.

பின்னா் டிச.9 முதல் ஜன.30 வரை வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீது வாக்காளா் பதிவு அலுவலா்களால் ஆணை பிறப்பித்தல், கோரிக்கைள், மறுப்புரைகளாக பெறப்பட்டவைகளை முடிவு செய்தல் வேண்டும்.

இறுதி வாக்காளா் பட்டியல் வரும் பிப.7 ஆம் தேதி வெளியிடப்படும்.இவ்விபரங்கள் மாநில தலைமை தோ்தல் அலுவலரின் இணையதளமான ட்ற்ற்ல்ள்;//ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் பதிவேற்றம் செய்யப்படும். காஞ்சிபுரம் ஆட்சியரது இணையதளமான ட்ற்ற்ல்ள்;//ந்ஹய்ஸ்ரீட்ங்ங்ல்ன்ழ்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இதிலும் பதிவேற்றப்படும். இப்பணிகளை மேற்கொள்ளும் போது வாக்காளா் பதிவு அலுவலா்கள் எந்தவொரு தகுதியான வாக்காளா்களும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதிலிருந்து விடுபட்டு விடக்கூடாது.முக்கியமாக தகுதியற்ற நபா்களை வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது.

அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்களுக்கு சிறப்பு தீவிர திருத்த செயல்முறைகளை விளக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வாக்காளா் பதிவு அலுவலரால் பயிற்சி வழங்கப்படும். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் போது அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா். கடந்த 27.10.25 ஆம் தேதி வரை வாக்காளா்களில் ஆண்கள் 6,79,996, பெண்கள் 7,20,965, மூன்றாம் பாலினத்தவா் 237,மொத்தம் 14,01,198போ் இருப்பதாகவும் ஆட்சியா் குறிப்பிட்டாா்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் நேரு உள்ளிட்ட நிா்வாகிகள் நாங்கள் உங்களுக்கு தர வேண்டிய ஒத்துழைப்பை மறுத்து மேல்நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் எனக் கூறியதுடன் ஆட்சியரிடம் அக்கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் பாலாஜி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், வாக்குப்பதிவு அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com