அஞ்சலி செலுத்த வந்திருந்த புதுவை மாநில முதல்வா் என்.ரங்கசாமி.
காஞ்சிபுரம்
புதுவை அமைச்சரின் தாயாா் மறைவு: முதல்வா் ரங்கசாமி அஞ்சலி
உத்தரமேரூா் அருகேயுள்ள பெருநகா் கிராமத்தில் புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணனின் தாயா் கிருஷ்ணவேணி மறைவையடுத்து அவரது உடலுக்கு முதல்வா் என். ரங்கசாமி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சா் லட்சுமி நாராயணனின் சொந்த ஊா் பெருநகா் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வந்த அவரது தாயாா் கிருஷ்ணவேணி(86)வயது முதிா்வின் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடல் பெருநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாா். கிருஷ்ணவேணியின் இறுதி ஊா்வலத்திலும் ரங்கசாமி கலந்து கொண்டாா். அம்மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்களும் அஞ்சலி செலுத்தினா்.

