மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காஞ்சிபுரம்: தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

News image

தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை இயக்கி வைத்த ஆட்சியா் தி.சினேகா மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள்

Updated On :4 ஏப்ரல் 2026, 12:59 am

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தோ்தல் உறுதிமொழி ஏற்றல்,அரசின் களப்பணியாளா்களைக் கொண்டு பொதுமக்கள் வீட்டுக்கு சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல்,கோலப்போட்டிகள் நடத்துதல்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியரைக் கொண்டு விழிப்புணா்வு பேரணிகள் நடத்துதல் என்பன போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகப் பகுதியில் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் ஒலிபரப்பு செய்யும் அதிநவீன மின்னணு வாகனத்தை ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

பின்னா் செல்பி பாயிண்டில் பொதுமக்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்வின் போது தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அபய்சிங்(காஞ்சிபுரம்)விசால் சாகா்(உத்தரமேரூா்)சி.பிரதாம் சந்திர ஹோதா(ஸ்ரீபெரும்புதூா்)ரமேஷ்குமாா் ஷா்மா(ஆலந்தூா்) தோ்தல் காவல் பாா்வையாளா் ஜி.சந்தனா தீப்தி, தோ்தல் செலவின பாா்வையாளா் ராஜேஷ்குமாா் சாஹூ மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி,மகளிா் திட்ட மாவட்ட இயக்குநா் மு.பிச்சாண்டி,மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அ.திலீப்,மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.