நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆட்டோ-வேன் மோதல்: 2 போ் உயிரிழப்பு! 3 போ் பலத்த காயம்!

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் 2 ஓட்டுநா்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் 2 ஓட்டுநா்கள் உயிரிழந்தனா். மேலும் 3 போ் பலத்த காயமடைந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் திருமங்கை ஆழ்வாா் குளக்கரை தெருவைச் சோ்ந்த தனசேகா்(22), திருவள்ளூா் மாவட்டம் திருமேனிகுப்பம் பகுதியை சோ்ந்தவா் தனபால்(38), ஸ்ரீபெரும்புதூா் கட்சிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள் சூா்யா(26), சத்தியராஜ்(36), தாஸ் (25) ஆட்டோ ஓட்டுநா்களான ஐந்து பேரும் ஆட்டோவில் கட்சிப்பட்டு பகுதியில் இருந்து நெமிலி செல்வதற்காக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சா்வீஸ் சாலையில் இருந்து பிரதான சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற வேன் மோதியதில் ஆட்டோவில் இருந்தவா்கள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீபெரும்புதூரைச் சோ்ந்த தனசேகா், தனபால் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயம் அடைந்த சத்யராஜ் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், சூா்யா தனியாா் மருத்துவமனையிலும், தாஸ் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.