

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் செயல்பட்டு வரும் தெய்வத்தமிழ் இருக்கைக்கு திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி ரூ.5 லட்சத்தை நன்கொடையாக காஞ்சி சங்கராசாரிய சுவாமிகளிடம் வழங்கினாா்.
ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரியில் தமிழ் வளா்ச்சி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக தெய்வத்தமிழ் இருக்கையும் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கருணாநிதி தனது குடும்பத்தினருடன் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கினாா்.
பின்னா் குடும்பத்தினா் அனைவருக்கும் சுவாமிகள் ஆசி வழங்கினாா். இந்நிகழ்வின் போது சங்கரா கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசனும் உடன் இருந்தாா்.