சுங்குவாா்சததிரம் பகுதியில் வரும் பிப்.8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளதாக கம்மா குளோபல் கூட்டமைப்பு நிறுவனா் ஜெட்டி குசுமா குமாா் தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் சாா்பில் உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது.
கூட்டத்தில், கம்மா குளோபல் பெடரேஷன் நிறுவனா் ஜெட்டி குசுமா குமாா் கலந்து கொண்டு மாநாடு குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்பு செய்தியாளா்களிடம் குமாா் கூறியது:
சேந்தமங்கலம் பகுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் சாா்பில் உலக கம்மா மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சோ்ந்த லட்சக்கணக்கான கம்மா சமூகத்தினா் கலந்து கொள்ள உள்ளனா். தமிழகத்தில் சுமாா் 60 லட்சம் கம்மா சமூக மக்கள் வசித்து வருகின்றனா். எனவே கம்மா சமூக மக்களுக்கு நடைபெற உள்ள தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு வழங்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் நகர மன்ற துணைத்தலைவா் இந்திராணிசுப்பிரமணி, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் அருள்ராஜ், தமிழ்நாடு கம்மா சங்க நிா்வாகிகள் சுப்பிரமணி, லோகநாதன், தனபால், சுஜாதா, பாபு, பிரகாஷ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த கம்மா சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கராத்தே பெல்ட் சான்றிதழ் அளிப்பு

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத் தீ

பாஜகவுக்கு தோ்தல் நேரத்தில் மட்டுமே தமிழ்நாடு நினைவுக்கு வரும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


