பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் வளம் பெறும்: பாஜக மாநிலச் செயலாளா்

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் சிறந்த மாநிலமாக மாறும் என பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ்.பி.செல்வம் தெரிவித்தாா்.

News image

செய்தியாளா்களிடம் பேசிய பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ் பி. செல்வம்.

Updated On :7 பிப்ரவரி 2026, 8:15 pm

இரட்டை என்ஜின் ஆட்சி அமைந்தால் தமிழகம் சிறந்த மாநிலமாக மாறும் என பாஜக மாநிலச் செயலாளா் வினோஜ்.பி.செல்வம் தெரிவித்தாா்.

மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் யு.ஜெகதீசன் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் வினோஜ்.பி.செல்வம் கலந்து கொண்டு மத்திய பட்ஜெட்டில் தமிழகம் என்ற தலைப்பில் விரிவாக பேசினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது..

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 9 -ஆவது முறையாக சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். அவரது திறமை, அனுபவம் ஆகியன பட்ஜெட்டில் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் பட்ஜெட் தாக்கலான ஒரு சில நிமிஷங்களில் ஒன்றும் இல்லாத வெற்று பட்ஜெட் என்று தமிழக முதல்வா் கூறியது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இலவசங்களை அறிவிப்பது மட்டுமே பட்ஜெட்டின் நோக்கமல்ல. தமிழகத்தின் வளா்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை.

மத்திய அரசிடமிருந்து பெறும் நிதியிலிருந்து தான் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரதமா் மோடி மதுராந்தகத்தில் அண்மையில் பேசிய போது தமிழகத்தில் விரைவில் இரட்டை என்ஜின்ஆட்சி அமையும் என்று பேசினாா். இரட்டை என்ஜின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மிகச்சிறந்த மாநிலமாக மாறி விடும் என்றாா்.

கட்சியின் நிா்வாகிகள் பெருமாள், டி.கணேஷ், பரந்தாமன் உடன் இருந்தனா்.