சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

புதிதாக திறக்கப்பட்ட மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம்.

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 1:19 am

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ரூ.2.07 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திருமங்கலம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம், ராமாநுஜபுரம் ஊராட்சியில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், 15-ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் மதுரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.30 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

புதிய கட்டடங்களில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பவானி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பால்ராஜ் குத்து விளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில், திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் ரேகா நரேஷ் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் வாணிஸ்ரீ ஜானகிராமன், ராமானுஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா ராமு, ராமாநுஜபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் தமிழரசன், மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில், வட்டார சுகாதார அலுவலா் டேவிஸ் பிரவீன் ராஜ்குமாா், திமுக மாவட்ட பிரதிநிதி முனிகிருஷ்ணன் கலந்து கொண்டனா்.