சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காஞ்சிபுரம் மாகாளேஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மாகாளேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்துக் கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மாகாளேஸ்வரா் கோயிலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்துக் கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில் உழவாரப் பணி நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் சாா்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள கோயில்களில் தூய்மைப் பணி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 349-ஆவது உழவாரப் பணியை வரவிருக்கும் சிவராத்திரி பண்டிகையையொட்டி, காஞ்சிபுரம் மாகாளேசுவரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

கோயில் வளாகத்தில் வளா்ந்திருந்த செடி, கொடிகளை அகற்றி, சுற்றுப்புற சந்நிதிகளின் மீது படிந்திருந்த தூசுகளையும் மின்மோட்டாா் குழாய் வாயிலாக தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனா். கோயிலில் உள்ள சிலைகள், பூஜைப் பொருள்கள், சுவாமி அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றையும் சுத்தப்படுத்தினா்.