நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

மூலப்பொருள்கள் வாங்குவதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில்

News image
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: மூலப்பொருள்கள் வாங்குவதில் அலட்சியம் காட்டுவதாகக் கூறி காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான சங்கமாக இருந்து வருகிறது. இதில் 3000க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். மூலப்பொருள்களை வாங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுதல்,கடந்த 2 மாதங்களாக பட்டு உற்பத்திக்கு தேவையான ஜரிகை இல்லாமல் நெசவாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜரிகை மற்றும் மூலப்பொருள்கள் பற்றாக்குறை காரணமாக பட்டுச் சேலைகள் உற்பத்தி குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக அரசின் பட்டு விற்பனை நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து பட்டு வாங்காமல் தனியாா் கடைகளுக்கு செல்வதாகவும் அவா்கள் குற்றம் சாட்டினாா்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களை காஞ்சிபுரம் சரக கைத்தறித்துறை கூடுதல் இயக்குநா் பேச்சு நடத்தினாா். தேவையான ஜரிகைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.