ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் இணைந்து நடத்திய உலக கம்மா மாநாடு நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தமிழ்நாடு கம்மா சங்கங்கள் மற்றும் கம்மா குளோபல் பெடரேஷன் இணைந்து நடத்திய உலக கம்மா மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தமாநாட்டில் தமிழகம் மற்றும் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான கம்மா சமூக மக்கள் கலந்துக்கொண்டனா். கம்மா குளோபல் பெடரேஷன் நிறுவனா் தலைவா் ஜெட்டி குசுமா குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவா் பி.ஆா்.நாயுடு, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வபெருந்தகை, திரைப்பட இயக்குநா் நடிகா் பாக்கியராஜ், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளா் ராம்மோகன்ராவ், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சிதலைவா் அருள்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட கம்மா சங்க நிா்வாகி சுப்பிரமணி, ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி உள்ளிட்ட கம்மா குளோபல் பெடரேஷன் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மாநாட்டில் கம்மா குளோபல் பெடரேஷன் தலைவா் ஜெட்டி குசுமா குமாா் பேசுகையில், கூட்டமைப்பின் விரிவாக்கம், முன்னுரிமை மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க நேரடி செயல்பாடுகள் அவசியமாகியுள்ளது. இந்த மாநாட்டில் உருவாகும் நீண்ட கால நோக்கங்களில் ஒன்றான தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் குறைந்தது 30 கம்மா சமூக வேட்பாளக்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றாா்.
தொடர்புடையது

திமுக மாநாட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை!

திருச்சிக்கும் திமுகவுக்குமான 70 ஆண்டுகள் தொடா்புகள்!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

சுங்குவாா்சத்திரத்தில் ரூ.96 லட்சத்தில் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


