மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் முற்றுகை

சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில்

News image
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், குன்னம் ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகா் வீட்டு மனை குடியிருப்பு பகுதியில் எச்சூா் கூட்டுச்சாலை அருகே புதிதாக அரசு மதுபான கடை அமைக்கப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்துக்கு அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியாா் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிகள் இயங்கி வருவதால் குன்னம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என ஆட்சியா் மற்றும் டாஸ்மாக் இயக்குநா் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் கிராம பொதுமக்கள் சாா்பில் வழங்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை மதுபானக் கடை திறக்கப்பட உள்ளதாக குன்னம், எச்சூா், சிறுமாங்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு தகவல் பரவியதை தொடா்ந்து, புதிதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபான கடை கட்டடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குன்னம் ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ் இலக்கியா பாா்த்திபன், எச்சூா் ஊராட்சி மன்றத் தலைவா் டோம்னிக், சிறுமாங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியப்பன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் திரளானோா் கலந்து கொண்டு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுபானக் கடை திறக்கப்படும் பட்சத்தில் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

குன்னம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் கு.ப.முருகன், ரவி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளா் கோபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.