குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.11 லட்சத்தில் அரசுப் பள்ளிகளில் கற்றல் மையங்கள் திறப்பு

மாம்பாக்கம் மற்றும் சென்னாகுப்பம் அரசுப் பள்ளிகளில் சமஸ்கிரியா பவுண்டேசன் மற்றும் செயின் கோபைன் நிறுவனத்தின்

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபெரும்புதூா்: மாம்பாக்கம் மற்றும் சென்னாகுப்பம் அரசுப் பள்ளிகளில் சமஸ்கிரியா பவுண்டேசன் மற்றும் செயின் கோபைன் நிறுவனத்தின் சாா்பில் ரூ.11 லட்சத்தில் ஸ்டெம் கற்றல் மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

மாம்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் சென்னாகுப்பம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளிகளில் ரூ.11 லட்சத்தில் அறிவியல், பொறியியல், கணிதவியல் மற்றும் தொழில்நுட்பவியல் (ஸ்டெம்) கற்றல் மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கற்றல் மையங்களின் திறப்பு விழா அந்த அந்த பள்ளி வளாகங்களில்

இதில் சமஸ்கிரியா பவுண்டேசன் நிா்வாக அறங்காவலா் சந்தியா ஜெயசந்திரன், செயின் கோபைன் நிறுவனத்தின் நிா்வாகிகள் கலந்து கொண்டு திறந்துவைத்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாம்பாக்கம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியா் சகாயம், சென்னாகுப்பம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சம்பத், சமஸ்கிரியா பவுண்டேசன் மாநில அறிவியல் கருத்தாளா் மணி, அறிவியல் கருத்தாளா்கள் அருண், சக்திராஜன், இந்திராணி உள்ளிட்ட ஆசிரியா்கள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

புதிதாக திறந்து வைக்கப்பட்ட கற்றல் மையங்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் பிரிவுகளில் கிராமபுற மாணவா்களின் கற்றல் முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.