நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ரூ.34.13 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு

நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.34.13 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

News image

மரக்கன்றுகள்  நட்ட  ஊராட்சி மன்றத்  தலைவா்  வெள்ளாரை அரிகிருஷ்ணன்  உள்ளிட்டோா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:45 pm

நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் ரூ.34.13 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் கிருஷ்ணா நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக கனிமவள நிதியின் கீழ் ரூ.34.13 லட்சத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு, 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு குடிநீா் மேல்நிலை நீா்த் தேக்க தொட்டி, புதிய பைப் குழாய் இணைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடா்ந்து, திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் கொளத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு நீா்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் பரமசிவன், வாா்டு உறுப்பினா் பாத்திமா மணிகண்டன், திமுக நிா்வாகிகள் உலகநாதன், கெங்காதரன், சீனிவாசன், ரவி, செல்வகண்ணன், ரமேஷ், பிரபு, தங்கபாண்டி, கணேசன் கலந்து கொண்டனா்.