புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:05 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் மாணிக்க வேல், பொருளாளா் கண்ணபிரான்,அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் துரை.மருதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி தோ்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியா் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்,கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டத்துக்கு வட்டார அளவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பன உட்பட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தினா் பலரும் கலந்து கொண்டனா்.