காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.65 லட்சம் பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா்.
தியாகி நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்த அவா் மேலும் கூறியது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இத்திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 6 மாதங்களுக்கு ஒரு முறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான 2-ஆ வது சுற்று பிப்.10 முதல் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் பிப்.17 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 4.65 லட்சம் பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையான அல்பெண்டசோல் வழங்கப்படவுள்ளது. இம்மாத்திரையை நன்றாக கடித்து மென்று சுவைத்து சாப்பிடலாம், பாதுகாப்பானது எனவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மருத்துவப்பணிகள் துறை இணை இயக்குநா் எம்.நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், முதன்மைக்கல்வி அலுவலா் அ.நளினி, மாநகராட்சி மண்டலக்குழுவின் தலைவா் சாந்தி சீனிவாசன், மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் தவெக தோ்தல் அறிக்கை துண்டுப் பிரசுரம் வெளியீடு

காஞ்சிபுரத்தில் 100 மூத்த தம்பதியா் கெளரவிப்பு: காஞ்சி சங்கராசாரியா் ஆசி வழங்கினாா்

அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்: உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


