சந்தவேலூா் அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடி சென்றும் தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில், 45-ஆவது ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மூலவா் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடைபெற்று மலா் மற்றும் பழங்கள் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துக்கொண்டு சுந்தரேஸ்வரரை வணங்கி சென்றனா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கிராம தா்மகா்த்தா எஸ்.பி.பாலமுருகன் தலைமையிலும், கிராம நாட்டாண்மைதாரா் என்.சங்கா் முன்னிலையில் அலகு குத்தியும், பூந்தோ் இழுத்தும், வாகனங்களில் தொங்கியபடியும் கிராம முழுவதும்ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சியும் உற்சவா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் திருவீதிஉலாவும் நடைபெற்றது. இதில் சந்தவேலூா் ஒன்றியகுழு உறுப்பினா் உஷா கோதண்டன், ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி, துணைத்தலைவா் மகாலட்சுமி ஜெயக்குமாா் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

அரியலூரில் மகா காளியம்மன் கோயில் பூச்சொரிதழ் விழா

கணக்கம்பட்டி சத்குரு ஆலயத்தில் மகா மங்கள குருபூஜை பெருவிழா
மகா சிவராத்திரி: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 93 வயது மூதாட்டி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


