வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைக் கடை, சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:20 pm

வெங்காடு ஊராட்சியில் ரூ. 20 லட்சத்தில் சிமெண்ட் சாலை, நியாய விலைக் கடை கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வெங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட கருணாகரச்சேரி கிராமத்தில்ஊராட்சி பொது நிதியின் மூலம் ரூ. 10 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் இரும்பேடு கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இதில், வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளிஉலகநாதன் கலந்துகொண்டு, வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், வெங்காடு ஏரிநீா் பாசன சங்கத் தலைவா் வெங்காடு உலகநாதன், ஊராட்சிமன்ற துணைத் தலைவா் தமிழ்செல்வி ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா்கள் இந்திராணி முருகன், எத்திராஜன், ஊராட்சி செயலா் தணிகாசலம், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.