கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஓபிஎஸ் அணியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் விலகல்

ஒபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
தனது விலகல் கடிதத்தை காண்பித்த ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா்.
Updated On :18 பிப்ரவரி 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

ஒபிஎஸ் தலைமை வகிக்கும் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித் குமாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது:.

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் கழகத்தின் தலைவராக ஓபிஎஸ் இருந்து வருகிறாா். அவரை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி சோ்த்துக் கொள்ளாததால் வேறு கூட்டணியில் இணைவோம் என்று கழகத்தின் மாவட்ட செயலாளா்கள் 88 பேரில் 77 போ் வலியுறுத்தினோம். அதற்கு ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருப்பது தொண்டா்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி விட்டோம்.

கட்சியிலிருந்து விலகிய ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் வீட்டுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கிறோம். ஒபிஎஸ் அணியிலிருந்து விலகி பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கவுள்ள கட்சியில் அனைவரும் இணைய இருக்கிறோம். எனவும் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தெரிவித்தாா்.

முன்னதாக ஓபிஎஸ் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளிடமும் ஆலோசனை நடத்தினாா்.