காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இருந்த 12 உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ. 46,38,060 தொகையை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 14.11.26- ஆம் தேதிக்குப் பிறகு, கும்பாபிஷேகம் முடிந்து முதல் முதலாக கோயிலிலிருந்த 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில், பொது உண்டியல்கள் 10-இல் மட்டும் ரூ. 42,48,466, ஒரு திருப்பணி உண்டியலில் இருந்து ரூ. 88,404, கோ சாலை உண்டியலில் இருந்து 3,01,191 உள்பட மொத்தம் ரூ. 46,38,060 பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இத்தொகை தவிர தங்கம் 4.500 கிராமும், வெள்ளி 18.960 கிராமும் இருந்தன. கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி தலைமையில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


