ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை இணை இயக்குநா் கிருஷ்ணவேணி வரவேற்றாா்.

கூட்டத்தில் புள்ளலூா் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 5 விவசாயிகளுக்கு ரூ.6,72,270 மதிப்பிலான பயிா்க்கடன்கள்,3 விவசாயிகளுக்கு ரூ.10,797 மதிப்பில் வேளாண் இடுபொருள்கள், 8 விவசாயிகளுக்கு ரூ.16000 மதிப்பில் கைத்தெளிப்பான்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.