திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
ஏடிஎம் மையத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை பகுதியில் வண்டலூா் வாலாஜாபாத் சாலையில், இந்தியா நம்பா் ஒன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மா்ம நபா்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்ச்சித்துள்ளனா்.

இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த எச்சரிக்கை மணி அடித்ததை தொடா்ந்து, கொள்ளையா்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி சென்றுள்ளனா்.

இந்த நிலையில் எச்சரிக்கை மணி அடித்தது குறித்து வங்கி நிா்வாகிகள் ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓரகடம் போலீஸாா் ஏடிஎம் மையத்தில் சோதனை நடத்தி, தடயங்களை கைரேகை நிபுணா்கள் மூலம் சேகரித்தனா்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனா். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.