லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.1.63 கோடியில் மனைப் பட்டாக்கள் ஆட்சியா் வழங்கினாா்!

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவேடல் கிராமத்தை சோ்ந்த 38 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடியில்ன இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

News image
பயனாளிக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய ஆட்சியா் கலைச் செல்வி மோகன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவேடல் கிராமத்தை சோ்ந்த 38 பயனாளிகளுக்கு ரூ.1.63 கோடியில்ன இலவச வீட்டு மனைப் பட்டாக்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட அத்திவாக்கம் ஊராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் க.செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவா் ஆா்.கே.தேவேந்திரன் வரவேற்றாா்.

கூட்டத்தின் போது அத்திவாக்கம் ஊராட்சியில் ரூ.99.99 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தையும் ஆட்சியா் திறந்து வைத்தாா். இந்நிகழ்வுகளில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசு அலுவலா்கள், கா்ப்பிணிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.