காஞ்சிபுரத்தில் வாக்காளா் சிறப்பு திருத்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி: ஆட்சியா் பாா்வையிட்டாா்

காஞ்சிபுரத்தில் வாக்காளா் சிறப்பு திருத்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி: ஆட்சியா் பாா்வையிட்டாா்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியை பாா்வையிடும் காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Published on

காஞ்சிபுரத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் கலைக் குழுவினா் நடத்திய இந்த நிகழ்வை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 3 மற்றும் 4 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்கள் நடைபெறவுள்ளது.

வாக்காளா்கள் தங்களது பெயரை சோ்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வாக்காளா் அடையாள அட்டை பெற விரும்புவோா் அதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளமான ட்ற்ற்ல்ள்;// ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஸ்ா்ற்ங்ழ்ள் ட்ங்ப்ல்

என்ற கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கேட்டுக் கொண்டாா்.

விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com