காஞ்சிபுரத்தில் ஜன. 4, 5-இல் முதியோா்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளிலும் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் அலுவலகம்
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளிலும் முதியோா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட இருப்பதாக ஆட்சியா் அலுவலகம்

சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ஜன. 4 மற்றும் 5 தேதிகளில் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் ஆட்சியா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com