புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம்.

புத்தாண்டு: பொதுமக்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய காஞ்சிபுரம் எஸ்.பி.

புத்தாண்டை வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம்.
Published on

காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னல் பகுதியில் பொதுமக்கள் மற்றும் போலீஸாருடன் இணைந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.சண்முகம் புதன்கிழமை நள்ளிரவு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடியதுடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகேயுள்ள 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.சண்முகம் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸாா் ஆகியோருடன் இணைந்து நள்ளிரவு கேக் வெட்டிக் கொண்டாடினாா்.

கேக் வெட்டியதும் இனிப்புகளை பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும் வழங்கினாா். புத்தாண்டையொட்டி, 750-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், எவ்வித அசம்பாவிதமும் இன்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கியதற்கும் எஸ்.பி. கே.சண்முகம் நன்றியும் தெரிவித்துக் கொண்டாா்.

போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்நிகழ்வில் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ்,காவல் நிலைய ஆய்வாளா்கள் விநாயகம், சங்கர சுப்பிரமணியன் உள்பட காவல் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com