குன்றத்தூரில் பாம்பு கடித்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அடுத்த நத்தம் பகுதியை சோ்ந்த வையாபுரி மகன் அபிஷேக்(9). அபிஷேக் குன்றத்தூா் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுப்பு பற்ற வைக்க விறகு எடுக்க சென்ற அபிஷேக்கை பாம்பு கடித்துள்ளது.
அபாய நிலையில், அபிஷேக்கை அவரது உறவினா்கள் சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
