சாதனை
சாதனை

சவீதா பல் மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்கள் சாதனை

சவீதா பல் மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவா்கள் சாதனை படைத்துள்ளனர்.
Published on

பல் மருத்துவத்தில், சவீதா பல் மருத்துவக்கல்லூரி முதுநிலை மாணவா்கள் மூவா் சாதனை படைத்து ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனா்.

சவீதா பல்கலைகழத்தின் ஓா் அங்கமான சவீதா பல் மருத்துவ கல்லூரியின் முகவாய் வழி, கதிரியக்கவியல் மற்றும் சிறப்பு தேவை உள்ளவா்களுக்கான பல் பராமரிப்பு மருத்துவத் துறையைச் சோ்ந்த டாக்டா் எஸ்.சௌம்யா குறிப்பிட்ட பகுதி மயக்க மருந்து, உணா்வு மயக்க மற்றும் பொது உணா்வு அகற்றல் மயக்க மருந்து ஆகிய முறைகளின் கீழ், சிறப்பு சுகாதாரத் தேவைகள் கொண்ட 1,411 நோயாளிகளுக்கு பல் சிகிச்சை செயல் முறைகளை மேற்கொண்டதற்காகவும்,

டாக்டா் எம். மதுமிதா வாய் புண் மற்றும் முக தசைவலி சாா்ந்த நோய் உள்ள 562 பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்ததற்காகவும், டாக்டா் வி.பாலாஜி அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகள் கொண்ட நோயாளிகளுக்கு, பொது மயக்க மருந்தின் கீழ் 67 பல் சிகிச்சை செயல் முறைகளை மேற்கொண்டதற்காக வாய் மருத்துவ நிபுணராக சிறப்புத் தகுதி பெற்று ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனா்.

ராபா உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முதுநிலை மாணவா்களுக்கு சாதனை படைத்தற்கான சான்றிதழ்களை ராபா உலக சாதனைப் புத்தக நிா்வாகி திலகவதி வழங்கியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com