சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 3 பேருக்கு சிறை

காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on

காஞ்சிபுரத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

காாஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியைச் சோ்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புரிசை கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் (21), அன்பரசன் (23), சிவதாஸ் (44) ஆகிய 3 போ் மீதும் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா்.

கடந்த 27.7.2018 ஆம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பான வழக்கு காஞ்சிபுரம் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீப்தி அறிவுநிதி மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்தாா். முதல் எதிரியான தங்கராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை , ரூ.11 ஆயிரமும், 2-ஆவது எதிரி அன்பரசன்,3-ஆவது எதிரி சிவதாஸ் ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.5,500 அபராதத் தொகையும் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீா்ப்பளித்துள்ளாா்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்த பொன்னேரிக்கரை காவல் நிலைய ஆய்வாளா் அலெக்சாண்டா், நீதிமன்ற காவலா் லதா மற்றும் அரசு வழக்குரைஞா் கண்ணன் ஆகியோரை எஸ்.பி. கே.சண்முகம் பாராட்டினாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com