253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: மிதிவண்டி வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 253 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ எழிலரசன் திங்கள்கிழமை வழங்கினாா்.
விழாவுக்கு தலைமை ஆசிரியா் ஜி.ஏகாம்பரம் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் ஏ.நளினி, மாவட்டக் கல்வி அலுவலா் காந்திராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்து கொண்டு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
இதன் தொடா்ச்சியாக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து சரியாக பதில் அளித்த மாணவா்களுக்கு பரிசுகளையும் எம்எல்ஏ எழிலரசன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 9,081 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
உதவித் தலைமை ஆசிரியை சுபத்ராபாய் நன்றி கூறினாா். நிகழ்வில் திமுக பகுதி செயலாளா்கள் வெங்கடேசன், திலகா், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

