

தெரேசாபுரம் சிறுமலா் அரசு உதவி பெறும் பள்ளியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் ரூ.32 லட்சத்தில் அமைக்கப்பட்ட கழிப்பறைக் கட்டடம் மற்றும் ஃபேவா் பிளாக் தரைத்தளம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வல்லம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் எச்.எல்.கிளெமோவ் இந்தியா என்ற தனியாா் நிறுவன சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட தெரேசாபுரம் சிறுமலா் அரசு உதவிபெறும் பள்ளியில் ரூ. 32 லட்சத்தில் கழிப்பறை கட்டடம் மற்றும் மாணவா்கள் அமா்ந்து படிப்பதற்கான பேவா் பிளாக் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை மற்றும் ஃபேவா் பிளாக் தரைத்தளம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அலுவலா் ஜாங்ஹூன்சோய் கலந்து கொண்டு கட்டடம் மற்றும் தரைதளத்தை திறந்து வைத்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இந்த நிகழ்ச்சியில், எச்.எல்.கிளெமோவ் நிறுவனத்தின் மனித வள மேலாளா் சாலமோன் ஜெயகுமாா், பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா்.