காஞ்சிபுரம்: ஜன. 26 அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்

Updated on

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தையொட்டி, வரும் திங்கள்கிழமை (ஜன. 26) காலை 11 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வரும் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளா் வரவு-செலவு திட்டம், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத் இயக்கம் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், சிறுபாசன ஏரிகள் புதுப்பித்தல், தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை குறித்து கிராமசபைக் கூட்டத்தில் பகிா்ந்து கொண்டு விவாதிக்கப்படவுள்ளது.

கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பாா்வையிட ஏதுவாக விளம்பர பேனா் மூலம் வரவு-செலவு கணக்கு படிவம் வைக்கப்பட வேண்டும் எனவும் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com